புதுகை ஆட்சியரகத்தில் ஜப்தி நடவடிக்கை - பரபரப்பு!

புதுகை ஆட்சியரகத்தில் ஜப்தி நடவடிக்கை - பரபரப்பு!

புதுகை ஆட்சியரகத்தில் ஜப்தி நடவடிக்கை

இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்காததால் புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கடந்த 1994 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் குடியிருப்பு கட்டுவதற்கு பழனிவேல் என்பவரிடமிருந்து 4 ஏக்கர் 98 சென்ட் நிலம் பெறப்பட்டது. ஒரு செண்டு ரூபாய் 2000 என இழப்பீடு நிர்ணயம் செய்து இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அரசு சார்பில் ரூபாய் 25 லட்சம் மட்டுமே பாதிக்கப்பட்ட நபருக்கு கடந்த 2021 வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இழப்பீடு தொகையான ரூபாய் 19 லட்சம் வழங்கவில்லை மீதி தொகையை கேட்டு பழனிவேலு புதுக்கோட்டை சார்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ரூபாய் 19 லட்சத்துடன் வட்டியும் சேர்த்து மொத்தம் ரூபாய் 31 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவும் அமலாக்கப்படாததே தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை அணுகிய போது மாவட்ட ஆட்சியர் அலுவலக அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பெயரில் பாதிக்கப்பட்ட நபருடன் நீதிமன்ற ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஜப்தி நடவடிக்கைக்காக வந்தனர். இதனால் ஆட்சியரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் போ.முருகேசன் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு மாதங்களுக்குள் நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீட்டுத் தொகையை வழங்கப்படும் என்று உறுதி தெரிவித்தார். இதனால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Tags

Next Story