தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 2பேர் கைது

தூத்துக்குடியில் அத்துமீறி விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த 4.5 லட்சம் மதிப்பிலான 415 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து தாளமுத்து நகர் காவல் துறையினர் தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாட்டு தொழுவத்தில் சோதனை செய்தனர் அதில் அந்த மாட்டு தொழுவத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் நாலு லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான 409 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர் .

மேலும் தடை செய்யப்பட்ட புகையிலையை பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக தாளமுத்து நகர் பெரிய செல்வம் நகரை சேர்ந்த அந்தோணி முத்து என்ற நபரை கைது செய்தனர் இதேபோன்று தூத்துக்குடி வடபாகம் போலீசார் தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட ரூபாய் 19000 மதிப்பிலான ஆறு கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து தடை செய்யப்பட்ட புகையிலையை வைத்திருந்த தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த கந்தசாமியை கைது செய்தனர் மேலும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை எங்கிருந்து இவர்கள் கடத்தி வந்தனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story