பாட்டில் சைலன்ஸர் பைக் - போலீசார் அதிரடி நடவடிக்கை

தூத்துக்குடியில் அதிக சவுண்ட் எழுப்பும் பாட்டில் சைலன்ஸர் பொருத்திய இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் வந்தவர்களிடம் புதிய ஹெல்மெட் வாங்கி வரச் சொல்லி ஹெல்மெட்டை காண்பித்த பிறகு இருசக்கர வாகனத்தை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரையின்படி தூத்துக்குடி குரூஸ் பர்னாந் சிலை அருகே போக்குவரத்து ஆய்வாளர் பேச்சிமுத்து தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக சவுண்ட் எழுப்பும் பாட்டில் சைலன்சர் பொருத்திய இருசக்கர வாகனம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அதிக சவுண்ட் எழுப்பும் பாட்டில் சைலன்சரை இரு சக்கர வாகனத்திலிருந்து உடனடியாக அகற்ற வலியுறுத்திய போலீசார் அதற்கு அபராதம் விதித்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அவராதம் விதிக்காமல் அவர்களை உடனடியாக கடையில் சென்று புதிய ஹெல்மெட் வாங்கி தலையில் அணிய வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர். மேலும் தாங்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய எப்போதும் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஒட்ட வேண்டும் என அவர்களிடம் போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story