ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் பறிமுதல்

ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் பறிமுதல்

ஆய்வு செய்யும் அதிகாரிகள்


சிவகங்கை நகர் 48 காலனியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரசந்தை நடைபெறுவது வழக்கம். இங்கே காய்கறிகள், மீன்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சந்தையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

சந்தையில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து கடைகளில் ஆய்வு செய்ததில் இரண்டு கடைகளில் பார்மலின் ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இரு கடைகளுக்கும் எச்சரிக்கை விடுத்து, அவர்களிடம் இருந்த 25 கிலோ மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இரு கடைகளுக்கும் தலா ரூ.3000 அபராதம் விதித்தனார்.

மேலும் இதுபோல ரசாயனம் தடவப்பட்ட மீன்கள் விற்பனை செய்தால் கடைகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் எனவும் எச்சரித்த அதிகாரிகள், சந்தையில் பிற கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட 5 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story