மயிலாடுதுறை அருகே கான்கிரீட் லாரிகள் சிறைபிடிப்பு

மயிலாடுதுறை அருகே கான்கிரீட்  லாரிகள் சிறைபிடிப்பு
லாரியை சிறைப்பிடித்து மக்கள்
மயிலாடுதுறை அருகே கான்கிரீட் ஏற்றிச்செல்லும் லாரிகளால் தொடர்ந்து சாலைகள்சேதமானதைக் காண்டித்து லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது.

மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் பகுதியில் பிச்சைகட்டளை மற்றும் திருமெய்ஞானம் பகுதியில் ஆயிரத்திற்கும்மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். அவர்கள் திருக்கடையூருக்கு செல்லும் குறுகிய சந்துதெரு வழியாக சிமென்ட்கலவை ஏற்றிய ராட்ச லாரிகள் தேசிய நெடுஞ்சாலைதுறையின் நான்குவழிச் சாலைப்பணிக்காக சென்றுவந்தன.

இதனால் பள்ளி மாணவர்கள் விவசாயிகள் செல்லமுடியாமல் சாலை மிகவும் சிதிலமடைந்தது. இதைக் கண்டித்து பொதுமக்கள் மறியல் போராட்டம் நடந்தினர். . உடனடியாக சாலை அமைத்துத்தரப்படும் என்று கூறியதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

ஆனால் கடந்த 1 மாதகாலமாக சாலை போடப்படவில்லை. தேசிய சாலைப்பணிக்காக 30 அடி ஆழத்திற்கும் அதிகமான ஆழத்தில் மண் அள்ளப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். திருக்கடையூர் சந்துதெருவில் திடீரென்று 2 ராட்ச லாரிகளை திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமையில் சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரங்கம்பாடி தாசில்தார் சவரணன், பொறையார் காவல் ஆய்வாளர் சிங்காரவேல் நடத்திய பேச்சுவார்த்தையின்படி ஜனவரி 15 தேதிக்குள் சாலை அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அதுவரை கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்லாது என்றும் உறுதிமொழி எழுத்துபூர்வமாக அளிக்கப்பட்டதன்பேரில் 4 மணிநேரப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Tags

Next Story