இறந்த யானையின் தந்தங்கள் பறிமுதல் - வனத்துறை நடவடிக்கையால் குழப்பம்

இறந்த யானையின் தந்தங்கள் பறிமுதல் - வனத்துறை நடவடிக்கையால் குழப்பம்

கைது செய்யப்பட்டவர்கள் 

திண்டுக்கல் அருகே ஆறு மாதத்துக்கு முன்பு இறந்த யானையின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தற்போது கண்டுபிடித்திருப்பது பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பழநி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைக்காடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்த யானையின் தந்தத்தை எடுக்கப்பட்டுள்ளது .இதை ஒரு கோடிக்கு ரூபாய் பேரம் பேசி விற்பனை செய்ய முயன்ற நபர்களை கைது செய்து தமிழ்நாடு வன குற்றப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் வனத்துக்குள் ஆறு மாதத்திற்கு முன்பு யானை இறந்ததாக கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள் . யானை இறந்தது தெரியாதா யானை கணக்கெடுப்பு என்பது கண்துடைப்பா? இதே போல் எத்தனை யானைகள் இறந்துள்ளது. யானை இறந்துள்ளதா அல்லது கொல்லப்பட்டதா? வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் மெத்தனமாக இருப்பது நியாயமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Tags

Next Story