ராஜபாளையம் அருகே யானை தந்தம் பறிமுதல்: வனத்துறையினர் விசாரணை

ராஜபாளையம் அருகே யானை தந்தம் பறிமுதல்: வனத்துறையினர் விசாரணை

கைது செய்யப்பட்டர்கள்

ராஜபாளையம் அருகே இரண்டு யானை தந்தம் பறிமுதல் செய்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் பகுதியில் யானைத்தந்தம் விற்பனை செய்வதாக விருதுநகர் புலனாய்வு பிரிவு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது தகவலின் பெயரில் கோபால் தலைமையில் போலீசார் சேத்தூர் பகுதியில் சந்தேகப்படும் விதமாக சுற்றித்திரிந்த கணபதி சுந்தர நாச்சியார்புரம் சாவடி தெருவை சேர்ந்த திமுக முன்னால்,

ஒன்றிய துணைச் செயலாளர் அனந்தப்பன் அவரது மகன் ராம் அழகு (வயது 40)யானை தந்தங்களை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்தார் இவரிடம் இருந்து 60 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்த புலனாய் பிரிவு காவல் துறையினர் சிவகாசி பொறுப்பு வனத்துறை ரேஞ்சர் பூவேந்தனிடம் ஒப்படைத்தனர் மேலும் வனத்துறை அதிகாரிகள் விசாரணையில்,

கணபதி சுந்தரநாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லையா என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் செல்லையா தென்காசி பாராளுமன்ற தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமாரின் கார்ஓட்டுநர் என்பவர் குறிப்பிடத்தக்கது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

Tags

Next Story