சீர்காழியில் கஞ்சா பறிமுதல் : போலீசார் அதிரடி
கஞ்சா விற்ற இளைஞர்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது . கஞ்சா விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி. மீனா உத்தரவிட்டிருந்தார். கஞ்சா தேடுதல் வேட்டையில் தனிப்படை காவல் ஆய்வாளர் மணிகண்டகணேஷ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சீர்காழி உப்னஆற்றங்கரைக்கு விரைந்து சென்று சோதனை செய்தபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சீர்காழி சேந்தங்குடி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது பைசல் (21), வேட்டங்குடி கிராமத்தைச் சேர்ந்த கவின் குமார் (22), ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுபோல அரசூர் ரவுண்டானா பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (19) என்பவரை கைது செய்த கொள்ளிடம் போலீசார் அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.