வடமாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு ரயில் மூலம் கடத்திய கஞ்சா பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா
வடமாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு ரயில் மூலம் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 21கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மதுவிலக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனைக்காக கடத்தப்படுவது குறித்து கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் டிஸ்பி.சண்முகம் தலைமையியிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த மனோஜ் குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் என்பதும் ரயில் மூலம் 21கிலோ கஞ்சாவை இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வசித்து வரும் பீகார் மாவட்டத்தைச் சேர்ந்த அமான்குமார் என்பவருக்கு,
அதே போல ஈரோடு மாவட்டம், நாமக்கல் ,உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிய வந்தது .இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
Next Story