நள்ளிரவில் பயணிகள் வேனில் கடத்திய  மண்ணெண்ணெய்  பறிமுதல்

நள்ளிரவில் பயணிகள் வேனில் கடத்திய  மண்ணெண்ணெய்  பறிமுதல்
X
பறிமுதல் செய்த மானிய விலை மண்ணெ ண்ணெய்
கன்னியாகுமரி மாவட்டம், நீரோடி சோதனைசாவடியில் வந்த வேனில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கொண்டுசெல்லப்பட்ட மாநிய விலை மண்ணெண்ணெயை காவல்துறையினர் கைது செய்தனர்.

குமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் மீன்பிடி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு பயணிகள் வேன் ஓன்று நீரோடி சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு செல்வதற்காக வந்துள்ளது. அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ் ஐ பிரபாவுக்கு சந்தேகம் எழுந்து, வேனை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டார். அப்போது அதில் பயணித்த தொழிலாளர்கள் கொச்சிக்கு மீன்பிடிக்க செல்வதாக கூறினார். தொடர்ந்து வாகனத்தின் டிக்கி திறந்து சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பகுதியில் அரிசி, மசால் பொருள்களும் இன்னொரு பகுதியில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு கேன்களில் 200 லிட்டர் மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் இருந்தது. இது குறித்து விசாரித்த போது உணவு பொருட்கள் மட்டும் தான் எங்களுடையது, மண்ணெண்ணெய்க்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று மீன் தொழிலாளிகள் கூறியுள்ளனர்.

இதை அடுத்து போலீசார் மண்ணெண்ணெயும் வாகனத்தையும் கொல்லங்கோடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு கேரளா செல்லும் பயணிகள் வாகனங்களில் இதுபோன்று தனி அறைகளில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்தி செல்வதை கடத்தல்காரர்கள் புது முறையாக கையாண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Next Story