நேர கட்டுப்பாட்டை மீறி இயக்கிய கனிமவள லாரிகள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட லாரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவிற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளம் கொண்டு செல்லப்படுகிறது இந்த கனிமவள லாரிகளால் குமரி மாவட்டத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது மேலும் இந்த லாரிகளால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளால் சாலைகள் சேதமடைந்து வருகிறது. இந்த லாரிகளை குறிப்பிட்ட நேரத்தில் இயக்க வேண்டும் என்று பொதுமக்களும் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விழித்திருந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் லாரிகளுக்கு நேர கட்டுப்பாடு விதித்தார்.அதன்படி கனிம வள சரக்கு காலி வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும் எனவும், கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் கொற்றிகோடு போலீசார் சித்திரங்கோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த நான்கு கனிமவள லாரிகளை பறிமுதல் செய்தனர்.மாவட்ட நிர்வாகம் அனுமதித்த நேர கட்டுப்பாட்டை மீறி இயக்கியதால் லாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் நான்காயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.