முசுறியில் பைக்கில் கொண்டு வரப்பட்ட பணம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்
திருச்சி மாவட்டம் முசிறி குளித்தலை இணைக்கும் தந்தை பெரியார் பாலம் பகுதியில் 145 சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் சுந்தரி தலைமையில், தலைமை காவலர் ஆனந்தகுமார், முல்லைவேந்தன் பெண் காவலர் மதுபாலா, தேர்தல் புகைப்படகாரர் கெளதம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது,
அவ்வழியே மோட்டார் பைக்கில் மணப்பாறை வட்டம், மேல இறுதி கவுண்டம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி மகன் தினேஷ்குமார் 31 என்பவரை நிறுத்தி ஆய்வு மேற்கொண்டனர், அந்த ஆய்வில் அவரிடம் ரூ. 1,05,480 மகளிர் சுய உதவிக் குழுவின் வசூல் தொகை உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்ததால்,
அந்தத் தொகையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருவாய் வட்டாட்சியர் பாத்திமா சகாயராஜ் மூலம், துணை வட்டாட்சியர் லதாவிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் பாதுகாப்பான முறையில் சீல் வைக்கப்பட்டு முசிறி உதவி கருவூல அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
