இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவராணி மாத்திரைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவராணி மாத்திரைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 57 ஆயிரம் வலி நிவராணி மாத்திரைகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, குட்கா, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதனை தடுக்க கடலோர காவல்படையினரும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணியளவில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலுவை பட்டியலில் இருந்து கடற்கரைக்குச் செல்லும் உப்பளப்பாதையில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்

அப்போது லோடு வேனில் இருந்து ஒரு சிலர் போலீசாரைக் கண்டதும் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டனர்.

இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 76 மூட்டை பீடி இலை மற்றும் சுமார் 57 ஆயிரம் வல நிவராணி மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிள், லோடு வேன் பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை மீது வழக்கு பதிவு செய்து கியூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story