மதுரவாயலில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்

மதுரவாயலில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்

 மதுரவாயலில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரவாயலில் உரிய ஆவணம் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லும் பணத்தையும் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மகேந்திரன் தலைமையில் ஆலப்பாக்கம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற வேனை மடக்கி சோதனை செய்தபோது அதனை ஓட்டி வந்த மதுரவாயலைச் சேர்ந்த ராஜா(25), என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.14 லட்சம் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.மளிகை கடையில் வேலை செய்து வரும் அவர், கடை உரிமையாளர் கோயம்பேடு மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க பணத்தை கொடுத்து அனுப்பியதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சொல்லப்பட்ட அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பிறகு பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story