உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.63 ஆயிரம் பறிமுதல்

உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.63 ஆயிரம் பறிமுதல்

பணம் ஒப்படைப்பு 

பெரம்பலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.63,300 பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் ,தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அங்கு வந்த சரக்கு ஆட்டோ வாகனத்தில் பெரம்பலூர் நான்கு ரோடு மின் நகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் மாதவன் ஆகியோரிடமிருந்து உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்டு 63,330-ரூபாய் பணத்தை, பெரம்பலூர் மாவட்ட தேர்தல் படக்கும் படை அலுவலர் சீனிவாசன், வட்ட வழங்கல் அலுவலர், சத்தியமூர்த்தி தலைமை காவலர், செல்வி மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவால் பறிமுதல் செய்யப்பட்டு பணத்தை பெரம்பலூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story