அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு!

அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு!

இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இலுப்பூரின் சுற்றுப்பகுதி ஆற்றுப்படுகை மற்றும் குளங்களில் அனுமதியின்றி சிலர் ஆற்றுமணல் மற்றும் கிராவல் மணல் அள்ளி, அப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக இலுப்பூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதன்பேரில், இலுப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினோத்குமார் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இலுப்பூர் அருகேயுள்ள ஆரியக்கோன்பட்டிக்குளம் அருகே மணல் அள்ளி வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில், இரண்டு யூனிட் மணல் அனுமதியின்றி அள்ளி வந்தது தெரியவந்தது. இைத்தொடர்ந்து, டிப்பர் லாரியை போலீஸார்பறிமுதல் செய்து காவல நிலையம் கொண்டு வந்தனர். மேலும், இதில் ஈடுபட்ட ஆரியக்கோன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செல்வம், உரிமையாளர் யுவராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story