பட்டுக்கோட்டையில் தரம் குறைந்த உணவுப்பொருட்கள் பறிமுதல்
பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் கலால் உதவி ஆணையர் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை கலால் தாசில்தார் சுமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புதிட்ட அலுவலர், சமூக நலத்துறை அலுவலர், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் ஆகியோர் காவல் துறையினருடன் இணைந்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், அறந்தாங்கி சாலை, பண்ணவயல் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
ஒரே நாளில் 17 கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 3 கடைகளில் புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் விற்பனை செய்யப்பட்டதும், தரம் குறைந்த உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்து இருந்ததும் கண்டறியப்பட் டது. உடனடியாக அந்த கடைகளில் இருந்து புகையிலை பொருட்கள், கேரிபேக்குகள், உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 3 கடை உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.ஆயிரம் வீதம் ரூ.8 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட் டது. இந்த சோதனையில் 10 கடைகளில் தகுதி குறைந்த 30 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப் பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் வேல் முருகன் கூறுகையில் "உணவு கலப்படம் சம்பந்தமாக 9444042322 என்றசெல்போன் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்தவர்க ளின் விவரம் ரகசியமாக வைக்கப்படும். புகார் தெரிவித்த 24 மணி நேரத்துக்குள் எந்த விதமான பாரபட்சமின்றி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். மிக முக்கியமாக உணவுப்பொருள் சம்பந்தமாக எந்த புகார் இருந்தாலும் உடனுக்குடன் தெரிவிக்கலாம் என்றார்.