தெற்கு கேட்-மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

தெற்கு கேட்-மளிகை கடையில் புகையிலை பொருட்கள் பறிமுதல். காவல்துறை நடவடிக்கை.
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜூன் 1-ம் தேதி காலை 10 மணி அளவில், உப்பிடமங்கலம் அருகே உள்ள தெற்கு கேட்டில் சோதனை மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் தனலட்சுமி என்ற பெயரில் மளிகைக் கடை நடத்தி வரும், கரூர் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் கரூர் உப்பிடமங்கலம் அருகே உள்ள புது கஞ்சமனூர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் ஆகியோரது கடையில் சோதனை மேற்கொண்ட போது, கடையில் ஹான்ஸ் மற்றும் கணேஷ் ஆகிய 33.30 கிலோ கிராம் எடை கொண்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு இந்த பொருள்களை மதிப்பீடு செய்த போது, ரூபாய் 13 ஆயிரத்து 200 என காவல்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து ரமேஷ் மற்றும் மோகன் ராஜை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story