விருதுநகர் அருகே ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
விருதுநகர் ஆமத்தூர் தனியார் கல்லூரி அருகே இன்று காலை காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் ஆமத்தூர் தனியார் கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் சிவகாசியில் இருந்து விருதுநகர் நோக்கி வரும் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த 21 வயதான மதின்மணி மகேந்திரா கார் கம்பெனி டீலரான இவர் சிவகாசியில் பணத்தை வசூல் செய்து காரைக்குடியில் உள்ள அலுவலகத்தில் செலுத்துவதற்காக காரில் சென்றுள்ளார்.
அப்போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆமத்தூர் ஏஏஏ கல்லூரி அருகே சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரை சோதனை செய்தனர். காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்தி 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் மகேஸ்வரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.