சேலம் : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு
சொர்க்கவாசல் திறப்பு
சேலத்தில் உள்ள அணைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று வைகுண்ட ஏகாதசி வைபவம் சிறப்பாக நடைபெற்றது. குறிப்பாக சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மிகவும் பழமையானதும் வரலாற்று சிறப்பு மிக்க கோவிலுமான அருள்மிகு கோட்டை அழகிரிநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வைபவம் நடைபெற்றது. அதிகாலை நான்கு மணி அளவில் உற்சவ மூர்த்தியான பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கக் கவசம் ரத்னகிரீடத்தில் ராஜா அலங்காரத்தில் பெருமாளும் தாயாரும் கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பின்னர் வடக்கு புரம் அமைந்துள்ள சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பல்லகில் பவனி வந்தார்.
இதனை தொடர்ந்து பெருமாளும் தாயாரும் திருக்கோவிலை சுற்றி வலம் வந்த பின் பெருமாளுக்கும் தாயருக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இது குறித்து சுதர்சனம் பட்டாசாரியார் கூறும் போது விரதத்தில் மிக முக்கிய விரதம் வைகுண்ட ஏகாதசி இந்த நாளில் விரதம் இருந்தால் சொர்கத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகம்.எனவும் இந்த நாளில் பெருமாளை தரிசிப்பது குடும்பத்திற்கு மிகவும் சிறந்தது எனவும் தெரிவித்தார். மேலும் இந்த வைகுண்ட ஏகாதசி திருநாளில் ஆண்டவனை தரிசனம் செய்தால் எல்லாவித நன்மைகளும் பெற்று குடும்பம் சந்தோஷமாக இருக்கும் என்றும் சகல ஜஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.