தேசிய அளவிலான பனிச் சறுக்குப் போட்டிக்கு தேர்வு
போட்டிக்கு தேர்வான வீரர்கள்
திண்டுக்கல் வீரர்கள் தேசிய அளவிலான பனிச் சறுக்குப் போட்டிக்கு தேவாகியுள்ளார்
ஹரியாணா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான பனிச் சறுக்கு (ஐஸ் ஸ்கேட்டிங்) போட்டியில் தமிழ்நாடு அணிக்காக திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் பயிற்சி பெற்ற 16 மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
ஹரியாணா மாநிலத்தில் தேசிய அளவிலான பனிச் சறுக்குப் போட்டி வருகிற ஜனவரி 2-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், தமிழ்நாடு அணி சாா்பில் பங்கேற்க முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்தின் சாா்பில், சின்னாளபட்டி ராஜன் உள் விளையாட்டு அரங்கத்தில் பயிற்சி பெற்ற 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்னா்.
Next Story