வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் தேர்வு

வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் தேர்வு
X

வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் தேர்வு 

கன்னியாகுமரியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு பணியாளர்கள் தேர்வு செய்யும் பணி நடைப்பெற்றது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் நாகர்கோவில் உள்ள கோணம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 315 பேர் வாக்கு எண்ணிக்கை சார்ந்த பணிகளில் நேரடியாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் மைக்ரோ அப்சர்வர்கள் ஆகியோர் மூன்று கட்ட சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பணியாளர்களை தேர்வு செய்வதற்கான முதற்கட்ட சுழற்சி முறை தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரால் வழங்கப்பட்ட மென்பொருளின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

தேர்தல் பார்வையாளர்கள் முன்னணியில் இரண்டாம் கட்ட சுழற்சி முறையில் தேர்வு நடைபெறும். இதில் சட்டமன்ற தொகுதி வீதம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். யாருக்கு எந்த சட்டமன்றத் தொகுதி என்பது முடிவாகும். வாக்கு எண்ணிக்கை தினமான ஜூன் நான்காம் தேதி அதிகாலை 5 மணி தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் இறுதி கட்ட சுழற்சி முறை தேர்வு நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு எந்த மேஜைக்கு எந்த கண் காணிப்பாளர், உதவியாளர், மைக்ரோ அப்சர்வர்கள் என்பது முடிவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story