தூத்துக்குடி : ஜூனியர் கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு
கபடி வீரர்கள் தேர்வு
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் 49-வது ஜூனியர் சிறுவர் கபடி போட்டி கோவையில் வருகிற 14 முதல் 16-ந் தேதி வரையும், சிறுமிகளுக்கான கபடி போட்டி வருகிற 25 முதல் 27-ந்தேதி வரையும் நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான தூத்துக்குடி மாவட்ட ஜூனியர் அணிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த தேர்வு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது. சிறுவர்களுக்கான தேர்வு நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கும், சிறுமிகளுக்கான தேர்வு வருகிற 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கும் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் சிறுவர், சிறுமிகள் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். (அதாவது 04.02.2004 அன்றோ அல்லது அதற்கு பின்போ பிறந்து இருக்க வேண்டும்).
சிறுவர்கள் 70 கிலோவுக்குள்ளும், சிறுமிகள் 65 கிலோவுக்குள்ளும் இருக்க வேண்டும். தேர்வுக்கு வரும்போது தேதி, மாதம், வருடத்துடன் கூடிய ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாக்காளர் அட்டை, புகைப்படத்துடன் கூடிய 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும். தேர்வு ‘மேட்’டில் நடப்பதால், அதற்கான ஷூ அணிந்து வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9443032943, 8778930212 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.