ஆட்கள் தேர்வு

ஆட்கள் தேர்வு

பெரம்பலூர் கிளை பணிமனையில், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஆட்கள் தேர்வு நடந்தது.


பெரம்பலூர் கிளை பணிமனையில், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஆட்கள் தேர்வு நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பெரம்பலூர் கிளை பணிமனையில், தினக்கூலி அடிப்படையில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஆட்கள் தேர்வு... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை பணிமனையில் 70க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன இதில் சுமார் 400 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், வயது அடிப்படையில் பணி ஓய்வு பெற்றவர்களின் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை நிரப்படாத நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பற்றாக்குறை இருந்து வந்துள்ளது இதனால் வாகனங்களை சரியானநேரத்தில், சரியான வழித்தடத்தில் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது, இதனை சரி செய்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை பணிமனை மேலாளர் ராஜா தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு எட்டு மணி அளவில் நடைபெற்றுள்ளது இதில் உயர் அதிகாரிகளின் ஒப்புதலோடு, ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர்களை தனியாக தினக்கூலி அடிப்படையில் சேர்த்து வாகனங்களை இயக்குவதான முடிவு செய்யப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை பணிமனையில், உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று பயன்பெறலம், இதில் ஓட்டுநர் தகுதிக்கு, 45 வயதுக்குள்ளும், 160 செ.மீ, உயரமும் 48 கில க்கு மேல் உடல் எடையும் இருக்க வேண்டும், மேலும் ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, எட்டாம் வகுப்பு தேர்ச்சிக்கான மாற்றுச் சான்றிதழ் ஆகியவையும் நடத்துனர் தகுதிக்கு 45 வயதுக்குள்ளும், 160 செ.மீ உயரமும். 45 கிலோவுக்கு மேல் உடல் எடைஇருத்தல் வேண்டும் மேலும் நடத்துனர் உரிமம், ஆதார் அட்டை, 10ம் வகுப்பு கல்வி தகுதி தேர்ச்சிகாண மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவையும் அசல் சான்றிதழ்களுடன், பெரம்பலூர் அடுத்துள்ள துறைமங்கலம் பகுதியில் இருக்கும் தமிழ்நாடு போக்குவரத்து கழக பெரம்பலூர் கிளை பணிமனையில் நேரில் சென்று பயன் பெறலாம் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை பணிமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story