பழையகோட்டையில் ரூ.10 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
மயிலை பசுமாடு
காங்கேயம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும் கம்பீரத்திற்கும் உலகப் புகழ்பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசு மாடுகள் விற்பனைச் சந்தை வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகின்றது.
இந்த சந்தையில் காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும். மேலும் இந்த காங்கேயம் எனக்கு கால்நடை விற்பனைச் சந்தையில் நேற்று காங்கேயம் இன பசு மாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் அதிக ஆர்வத்துடன் நேரில் கலந்து கொண்டனர். இந்தச் சந்தையில் நேற்று விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மொத்தம் 45 காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 30 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.
இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கேயம் இன மயிலை பசுமாடு ரூ.61 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.43,000 முதல் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ 10 லட்சத்திற்கு காங்கேயம் இன காளைகள் கன்றுகள் மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.