சேலத்தில் பூண்டு கிலோ ரூ.450-க்கு விற்பனை

சேலத்தில் பூண்டு கிலோ ரூ.450-க்கு விற்பனை

சேலத்தில் பூண்டு கிலோ ரூ.450-க்கு விற்பனை

பூண்டு வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ 450க்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அன்றாட சமையலில் நாம் பயன்படுத்தப்படும் பொருட்களில் பூண்டு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக அசைவ உணவு தயாரிப்பில் பூண்டு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. விளைச்சல் பாதிப்பு காரணமாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பூண்டு வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக பூண்டு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு இடங்களில் ஒரு கிலோ பூண்டு ரூ.500-யை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனை கடைகளில் பூண்டு கிலோ ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து பூண்டு விலை உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள் வேதனை அடைந்ததுடன் அதை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த விலை உயர்வு குறித்து பூண்டு மொத்த வியாபாரிகள் கூறியதாவது, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு பூண்டு கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக அங்கிருந்து பூண்டு வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக பூண்டு விலை அதிகரித்துள்ளது. நாங்கள் உயர்ரக பூண்டு கிலோ ரூ.380 வரை விற்று வருகிறோம். சில்லறை கடைகளில் அதன் விலை கூடுதலாக விற்கப்படுகிறது. மேலும் வடமாநிலங்களில் பூண்டு அறுவடை தொடங்கி விட்டதால் அடுத்து வரும் நாட்களில் பூண்டு வரத்து அதிகரிக்க தொடங்கும். அதன்பிறகு பூண்டு விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story