காரைக்குடியில் ஆரஞ்சுபழம் ரூபாய் 50க்கு விற்பனை - ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்
காரைக்குடியில் ஆரஞ்சுபழம் ரூபாய் 50க்கு விற்பனை
வெளி மாநிலங்கள் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளானர்
காரைக்குடியில் ஆரஞ்சுபழம் ஒரு கிலோ ரூ. 80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, விளைச்சல் மற்றும் அதிக வரத்து காரணமாக பல இடங்களிலும் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆரஞ்ச் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை உட்பட ஒரு சில இடங்களில் மட்டுமே ஆரஞ்ச் சாகுபடி உள்ளது. தற்போது சீசன் காரணமாகவும் அதிக விளைச்சல் காரணமாகவும் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளனர்
Next Story