செல்லியம்மன் கண்ணாடி விமானத்தில் திருவீதி உலா
செல்லியம்மன் திருவீதியுலா
திருச்சி மாவட்டம் ஊட்டத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் கோவிலின் உப கோயில் அருள்மிகு செல்லியம்மன் கோவில் ஆகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 18 நாட்கள் நடைபெறும் முள் படுகளம் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறவது வழக்கம்.இக்கோயில் சோளவள நாட்டில் காவேரி நதிக்கு வடபால் தேவகிரி என்னும் மலையாளும் நந்தா நதியாலும் சிறப்புற்றதும் இராஜராஜ சோழனால் தோற்றுவித்து வழிபாடு செய்யப்பெற்றது.
நந்தா நதிக்கு வடபால் நவசக்திகளிலும் பத்ரகாளி என்றும் அன்புடன் அழைக்கும் அருள்மிகு செல்லியம்மன் பக்தர்களுக்கு வேண்டும் வரம் அளிக்க முள்படுகளம் பெருவிழா நடைபறும் முள்படுகளம் என்பது புதிதாய் வெட்டப்பட்ட கருவேல முட்களை கோயிலுக்கு முன் உள்ள பரந்த இடத்தில் சுமார் 1000 அடி நீளமும் 5 அடி அகலமும் அடர்த்தியாக பரப்பி விட்டு பச்சிளம் பாலகர்கள் முதல் பெரியவர்கள் வரை முள் மீது படுத்து அம்மனை பிரார்த்தனை செய்து கொள்வதாகும்.
இந்த காட்சியை பார்க்கும்போதே நம் உடல் சிலிர்க்கும். தமிழகத்திலேயே இந்த ஊரில் மட்டுமே இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில் அருள்மிகு செல்லியம்மன் கோவில் முள் படுகளம் பெருவிழா கடந்த 19 ம் தேதி தொடங்கி வருகின்ற ஏப்ரல் மாதம் 5 ம் ந்தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த 19ம் தேதி முதல் மண்டகப்படி நடைபெற்றது. தொடர்ந்து 22 ம் ந்தேதி ஐய்யனார் காப்பும் 26 ம் ந்தேதி அம்மன் குடியழைப்பு நிகழ்வு நடைபெற்றது.
பெருவிழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முள் படுகள பெருவிழா இன்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்றது.இதில் பக்தர்கள் முள் மீது படுத்து அம்மனை பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து ஏப்ரல் 4ம் ந்தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார், செயல் அலுவலர் கிராம பொதுமக்கள், கோவில் பணியாளர்கள்,பக்தர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.