செல்வ விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகம்
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் ரங்கசாமி குளம் அருகில் விளக்குடி கோயில் தெருவில் பழமை வாய்ந்த அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திருக்கோயில் புனரமைக்கப்பட்டு சுப்பிரமணியர் நவகிரகங்கள் உள்ளிட்ட பல்வேறு சுவாமி சிலைகள் நிறுவப்பட்டு திருக்கோயில் பல லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கி நான்கு கால பூஜைக்கு பிறகு காலை 8:30 மணி அளவில் பூர்ணஹாதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்று மூவர் ராஜகோபுரம் மூலவர் விமானம் உள்ளிட்ட பல்வேறு சாமிகளுக்கு சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் விநாயகர், சுப்பிரமணியர் நவகிரகம், துர்க்கை பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். விழாவில் காஞ்சிபுரம் நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து மகா கும்பாபிஷேக நிகழ்வை கண்டு ரசித்தும் இறையருள் பெற்றனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்ன பிரசாதங்கள் வழங்கப்பட்டது இதேபோல் சேக்குபேட்டை நடுத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் துவங்கி இன்று காலை 11 மணியளவில் பூரணாஹதி நடைபெற்று கலச புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.