நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வை.செல்வராஜ் தேர்வு

நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக வை.செல்வராஜ் தேர்வு

நாகை வேட்பாளர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தோழர் வை.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தோழர் வை.செல்வராஜ் தேர்வு. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் வை.செல்வாஜ் (வயது 62), மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் ( எம்.ஏ. - எம்.பில் ) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் வரை பெற்ற இவர், கல்லூரியில் படிக்கும் பொழுதே அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின், மாணவர் இயக்க தலைவராக பணியாற்றினார்.

பின்னர் 1980 ம் ஆண்டு கட்சி உறுப்பினராக சேர்ந்து தன்னை முழுநேர அரசியல் பணியில் ஈடுபடுத்தி கொண்டார், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் செயலாளராக அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி ஒன்றிய செயலாளராக 12ஆண்டு காலம் பொறுப்பிலிருந்து சிறப்பாக செயல்பட்டார், மேலும் திருவாரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக, பின்னர் திருவாரூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார், அப்போது விவசாயிகளின் பிரச்சினையில் தீவிர கவனம் மேற்கொண்டார், மூணாறு தலைப்பு வெண்ணாறு பிரிவிலிருந்து பொன்னீரை வரை சுமார் 50 கீ.மீட்டர் அனைத்து அரசியல் கட்சியினர், வெகுமக்கள் என 25 ஆயிரம் பேரை ஒரே நாளில் திரட்டி சிரமதான பணியில் ஈடுபடுத்தி தூர்வாரும் பணியை மேற்கொண்டார். அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

டெல்லியில் நடைபெற்ற பஞ்யத்து ராஜ் மாநாட்டில் குடியரசு தலைவர், இந்திய பிரதமர் முன்னிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரபகிர்வு சம்மந்தமாக பேசினார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளராகவும் செயல்பட்டவர்., தற்போது இரண்டாவது முறையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி ஜீவரேகா நீதித்துறையில் பணியாற்றி வருகிறார், இவருக்கு இரண்டு குழந்தைகள் இதில் மகள் வெண்பா வழக்கறிஞராகவும், மகன் நண்பா பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.

எளிய குடும்பத்தில் பிறந்த இவர் செயலாற்றல் மிக்க வலிய தலைவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர், சாதாரண, ஏழை எளிய மக்களின் வாழ்வுரிமைக்காக அனுதினம் களத்தில் நின்று போராடும் களப்போராளி, எளிய மக்களின் நம்பிக்கையை பெற்ற பெருமைமிக்க தொண்டர்,

Tags

Next Story