மயிலாடுதுறை: பலத்த மழையிலும் தாக்குபிடித்த சம்பா,தாளடி பயிர்கள்

மயிலாடுதுறை:  பலத்த மழையிலும் தாக்குபிடித்த சம்பா,தாளடி பயிர்கள்

நெற்பயிர் 

மயிலாடுதுறை மாவட்டத்தில், கடந்த 2 தினங்களாக பலத்தமழை விட்டுவிட்டு பெய்தது, நேற்று காலைவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் சராசரியாக 6.86 செ.மீ., மழை பெய்துள்ளது. இன்று காலைவரை, மாவட்டத்தில் சராசரியாக 5.19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தைப் பொறுத்தவரை, நிலத்தடி நீரைக்கொண்டே விவசாயம் செய்யப்பட்டுவருகிறது, காவிரியில் நீர் வரத்து குறைந்ததால், நிலத்தடிநீர்மட்டம் இறங்கிவிட்டது. தற்பொழுது மழையானது பருவம் தவறி பெய்துவருகிறது. சம்பா, தாளடி விவசாயத்திற்கு கடந்த 2 தினங்களாக பெய்த மழை வரப்பிரசாதமாக உள்ளது, நிலத்தடிநீர்மட்டமும் உயர்ந்துவருகிறது, மேலும் இரண்டு தினங்கள்வரை மழை பெய்தாலும் பயிர்கள் தாங்கும் அளவிற்கு உள்ளது, கடந்த 10 தினங்களுக்கு முன்பு, நடவு செய்யப்பட்ட ஒருசில இடங்களில் மட்டும் நடவு மூழ்கும் வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் புயல், மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் தொலைபேசி எண்.1077 கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்.04364 222588 வாட்சப் எண். 7092255255 என்ற எண்களை பொதுமக்கள் கட்டணமில்லாமல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.

Tags

Next Story