தூத்துக்குடி: நோயாளிகளுக்கு ஏசி அறை

தூத்துக்குடி: நோயாளிகளுக்கு ஏசி அறை
நோயாளிகளுக்கு ஏ.சி வார்டு
அக்னி வெயில் நாளை துவங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு ஏசி அறை ஒதுக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அக்னி வெயில் நாளை துவங்க உள்ளது. மேலும் அதிகளவு வெப்பம் வீச கூடும் இதன் காரணமாக பொதுமக்கள் பிற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அறிவுரையின்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு கீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட பாதிப்பு மேலும் மயக்கம் அடைதல் பல்வேறு பாதிப்புகளால் வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக அவசர சிகிச்சை பிரிவு அருகே ஆறு படுக்கையில் கொண்ட குளிரூட்டப்பட்ட தனி வார்டு துவங்கப்பட்டுள்ளது.

இந்த வார்டில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர் ,குளுக்கோஸ் ,ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகள் செய்ய அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலேஷ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story