ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் கருத்தரங்கு
கருத்தரங்கு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கல்லூரியின் மின்னணு தகவல் தொடர்பு பொறியியல் துறை, மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை இணைந்து இலக்ட்ரோ கம்முனிக்ஸ் 2கே24 என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கினை நடத்தின.
இதில் கல்வி நிறுவனங்களின் தலைவர் தி.அரங்கண்ணல் தலைமை வகித்தார். தாளாளர் பி.மாலாலீனா குத்துவிழக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் தி.கே.கண்ணன் வரவேற்றார். கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் மதுவந்தினி அரங்கண்ணல், முதன்மை செயல் அலுவலர் முனைவர் பி.பிரேம்குமார், கல்வி இயக்குநர் பி.சஞ்செய் காந்தி, டீன்- வி.பாஸ்கரன், ஆராய்ச்சி இயக்குநர் எஸ்.செல்வராஜன், துனை முதல்வர் கே.சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக எம்பெஸிஸ் நிறுவனத்தின் இந்திய கேம்பஸ் அலுவலர் ஜோஸ்வா டேவிட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவது தான் என்றும் இது பொறியாளர்களின் கடமை என்றும் உலகை மாற்ற நீங்கள் பயன்படுத்தக் கூடிய மிக சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி என்று கூறினார். மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரை சமர்பித்தல், தொழில்நுட்ப வினாடி வினா, குறும்படம், லைவ் போட்டோகிராஃபி போன்ற போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு தொகை வழங்கப்பட்டது. மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறைத் தலைவர் ஆர்.பிரபு நன்றி கூறினார்.