கும்பகோணத்தில் தமுஎகச சார்பில் கருத்தரங்கம்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கும்பகோணம் கிளை சார்பில், "வள்ளலார் 200 வைக்கம் 100" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தமுஎகச மாநகர தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் அசோக்குமார் வரவேற்றார்.

மாவட்ட தலைவர் ஜீவபாரதி, மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில துணை பொதுச்செயலாளர் களப்பிரன் "கண்மூடி பழக்கமெல்லாம்" என்ற தலைப்பில் வள்ளலார் குறித்தும், மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா, "பெரியோர் எல்லாம் பெரியார் அல்ல" என்ற தலைப்பில் தந்தை பெரியார் குறித்தும் கருத்துரையாற்றினர்.

கவிஞர் கண்ணதாசன், கவிஞர் சுதாகரின் கவித்தூறலும், நடனம், நாடகம், இசையுடன், பள்ளிக் குழந்தைகள் பெரியார் வள்ளலார் வேடமணிந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாநகரப் பொருளாளர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.

Next Story