தனியார் பெண்கள் கல்லூரியில் கருத்தரங்கம்
தனியார் பெண்கள் கல்லூரியில் கருத்தரங்கம்
விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடைப்பெற்றது.
விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் விருதுநகர் தனியார் பெண்கள் கல்லூரியின் வணிகவியல் துறை 'டிஜிட்டல் மார்க்கெட்டிங் இன த 5ஜி எரா' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் பி.சி.கண்ணன் ஜானகி சுழற் கேடயத்திற்கான போட்டிகள் நடத்தியது. வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் மா.பொன்னியின் செல்வி வரவேற்புரை வழங்கினார். கல்லூரி புரவலர் வி.வி.வி.ஆ.மகேந்திரன், கல்லூரி முதல்வர் முனைவர் சு.மா.மீனா ராணி ஆகியோர் குத்து விளக்கேற்றியும் வாழ்த்துரை வழங்கியும் தொடக்க விழாவினை சிறப்பித்தனர். மேலும் கல்லூரி கூட்டுச் செயலர் கோ.லதா கருத்தரங்கில் கலந்து கொண்டார். கோயம்புத்தூர், ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வணிகவியல் தொழில்சார் கணக்கியல் துறை, இணைப்பேராசிரியர் முனைவர் பி.பிரகதீஸ்வரி டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவது குறித்தும் அதில் ஏற்படும் சவால்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். வணிகவியல் துறை, இணைப் பேராசிரியர் முனைவர் ஜெ.மகமாயி நன்றியுரை வழங்கினார்.
Next Story