வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் கருத்தரங்கம்
அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில் மார்க்கெட்டிங் 4.0 தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தலைவர் பூபதி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் சியாமளா வரவேற்றார். துறைத் தலைவர் வளர்மதி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
துணை முதல்வர் ரீனா, நுாலகர் வாசுகி, வணிகவியல் துறை பேராசிரியர் திவ்யபாரதி வாழ்த்திப் பேசினார். புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் செல்வதுர்காதேவி சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து வந்திருந்த 350 மாணவிகள் பங்கேற்றனர். 50 மாணவர்கள் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர். வணிகவியல் துறை பேராசிரியர் ஷகிலா நன்றி கூறினார்.
Next Story