மருத்துவர்களுக்கான கருத்தரங்க கல்வி நிகழ்ச்சி
கருத்தரங்கம்
காஞ்சி நீரிழிவு மன்றம் மற்றும் சன் பார்மா நிறுவனத்தின் சார்பில், மருத்துவர்களுக்கான, 87வது தொடர் மருத்துவ கருத்தரங்க கல்வி நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை முதுநிலை உதவிப் பேராசிரியர் டாக்டர் விவேகானந்தன் 'உயர் ரத்த அழுத்த நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான சமீபத்திய வழிகாட்டு நெறிமுறைகள்' என்ற தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார். காஞ்சி நீரிழிவு மன்ற நிறுவனரும், லைப் கேர் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குனருமான டாக்டர் அன்புச்செல்வன் 'சிறுநீர் பரிசோதனையில் ஆல்புமின், கிரியாட்டினின் உப்புகள் விகிதாச்சாரத்தின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் மனோகரன், மதிப்புறு செயலர் டாக்டர் தன்யகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்."
Next Story