தஞ்சாவூரில் நுகர்வோர் ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு

தஞ்சாவூரில் நுகர்வோர் ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு
தஞ்சாவூர் கருத்தரங்கில் ஒப்பந்தம் பரிமாறப்பட்டன
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் கிரியேட் நிறுவனம் மற்றும் சாஸ்த்ரா சார்பில் இயற்கை முறை விவசாயத்தால் கிடைக்கும் விளைபொருள்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நுகர்வோர் ஊக்குவிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இதில், கிரியேட் நிறுவனத் தலைவர் பி. துரைசிங்கம் தலைமை வகித்தார். வணிக வரித் துறை திருச்சி பிரிவு உதவி ஆணையர் சி.கயல்விழி சிறப்புரையாற்றினார். மேலும், மருத்துவபரிசோதனை மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் பூர்வீக நெல் வகைகளை, ஆரோக்கியத்துக்காக அறிவியல் சான்று அடிப்படையில் ஆராய்ச்சி செய்யும் அணுகுமுறைகளுக்கு கிரியேட் நிறுவனமும், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதையடுத்து, சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆர்.சந்திரமெளலி, ஆராய்ச்சி துறைத் தலைவர் ஜான் போஸ்கோ, இணைப்பேராசிரியர் ஏ.சத்யா, சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன், சித்த மருத்துவர் சவரிராஜ் சகாயம், ஆங்கில மருத்துவர்கள் ஜோசப் விக்டர், கிறிஸ்டினா ஜோசப், சிறுநீரக மருத்துவர் ராஜேஷ், மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். முன்னதாக, கிரியேட் திட்ட ஒருங்கிணைப்பாளர். கரேஷ் கண்ணா வரவேற்றார். நிறைவாக சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Tags

Next Story