கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் அ.ஜான் பீட்டர் தலைமை வகித்து பேசியது: நீர் மேலாண்மை இன்மையால், இன்று பல்வேறு துயரங்களை மக்கள் எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், நீர் மேலாண்மையில் தமிழர்கள் சிறந்தவர்களாய் இருந்தனர் என்பதை அறிய வேண்டும். நமது இலக்கியத்தில் இருக்கும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கொண்டு வாழ்வில் உயர வேண்டும் எனத் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன் சோழர்கால நீர் மேலாண்மை குறித்துக் கூறியது: சோழர்கள் காலத்தில் நீர் மேலாண்மை என்பது உலகத்தையே வியக்கவைக்கும் அளவில் இருந்தது. சோழர்கள் ஏரிகளைப் பாதுகாக்க தனி அதிகாரிகளை நியமித்திருந்தனர். காவிரியின் போக்கை மாற்றி ஒகேனக்கல்லில் வழித்தடத்தை உருவாக்கி டெல்டாவை வளம் பெறச் செய்தவர்கள் முற்காலச் சோழர்கள். தஞ்சாவூர், ஆழிவாய்க்கால் தொடங்கி மதுரை வரை பல நூறு ஏரிகள் இருந்தன. அவையெல்லாம் இன்று காணமல் போயுள்ளன. தஞ்சாவூரில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட நீர் ஆதாரங்கள் இருந்தன. அவை இன்று இல்லை. தஞ்சாவூர் பெரிய கோயில் அமைப்பு, மழை நீரை சிறப்பாக வெளியேற்றும் தன்மையில் அமையப் பெற்றுள்ளது எனத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் செயின்ட் ஆன்ரூஸ் தொடக்க கல்லூரி ஆசிரியர் மன்னை.ராஜகோபாலன், இலக்கியத்தில் வாழ்வியல் நெறி என்கிற தலைப்பில் பேசும்போது, 'மாணவர்கள் தன்பலன் அறிந்தவர்களாக, முடிவுகளை எடுப்பதில் வல்லவர்களாக, துணிவுடையவர்களாக வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக் கழக பேராசிரியர் காமராசு, கல்லூரியின் அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். தேர்வு நெறியாளர் தெ.மலர்விழி முன்னிலை வகித்தார். தமிழ்த் துறைத் தலைவர் சீ.வைஜெயந்தி மாலா வரவேற்றார். ஹேமலதா நன்றி கூறினார்.

Tags

Next Story