தனியார் கல்லூரியில் கருத்தரங்கம்
கருத்தரங்கம்
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில் ஜப்பான் மொழி அறிமுகம் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., நினைவு பொறியியல் கல்லுாரியில் ஜப்பான் மொழி அறிமுகம் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி துணை முதல்வர் மணிகண்ணன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தணிகைவேலன் சிறப்புரையாற்றினர். இதில் சென்னை ஞானந்தா நிஹாங்கோ காக்குவின் பயிற்சியாளர் மதுவந்தி பங்கேற்று ஜப்பான் மொழியின் சிறப்பம்சம் மற்றும் வேலை வாய்ப்பில் அதன் முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினார். கல்லுாரி மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் பலர் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் அலாவுதீன் நன்றி கூறினார்.
Next Story