தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கருத்தரங்கம்

மாமல்லபுரம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் தனியார் நட்சத்திர விடுதியில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் யாத்திரையில், என்ன வெற்றி பெற்றுள்ளார்? வெற்றியின் தன்மை என்ன? எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் நடந்துள்ளார்? அந்த கூட்டங்களில் எவ்வளவு பேர் கலந்து கொண்டனர்? அவருடன் வந்தவர்கள் ஒவ்வொருவரும் அவருடன் நடந்தார்களா? உள்ளூர் மக்கள் அவருடன் நடந்தார்களா? எத்தனை ஊர்களில் நடந்தார்கள் என்பதையெல்லாம் பார்த்து விட்டு தான், வெற்றியா? தோல்வியா? என சொல்ல வேண்டுமே தவிர எல்லாரும் போகிற மாதிரி அவரும் போனால் அது வெற்றியாகாது. அது தவறான பிரச்சாரம் என பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து உள்ளார். அதனை வரவேற்கிறோம். இந்திய ஜனநாயகம் என்பது பல்வேறு விதமான கருத்துக்களை சொல்லக்கூடிய ஒரு இடம் தான். சர்வாதிகார நாடுகளில் தான் யாரும் அரசியல் கருத்துக்களை சொல்ல முடியாது. ஜனநாயக நாடுகளில் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம், அவருக்கும் பரவலான ஆதரவு உள்ளது. அவர் கட்சி தொடங்கியதும் அரசியல் வருகைக்கும் வாழ்த்து சொல்கிறோம் என பேசினார்.

Tags

Next Story