சுகாதார பராமரிப்புத் துறை சார்பில் கருத்தரங்கு

சுகாதார பராமரிப்புத் துறை சார்பில் கருத்தரங்கு

கருத்தரங்கு

மதுரையில் நடந்த சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கில் உலகளவில் புகழ்பெற்ற அறுவைசிகிச்சை நிபுணரான பேராசிரியர் முகமது ரேலாவிற்கு அபிகானி ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் மதுரை மாநகரில் சுகாதார பராமரிப்புத் துறையின் நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சி மீதான ஒரு நாள் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நிகழ்வான அபிகான் 2024 – ல் தலைமை உரையை முகமது ரேலா வழங்கினார். ஆற்றல் / எரிசக்தி, வரி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான செலவுகள் இந்நாட்டில் மருத்துவமனைகளை நிதிசார் நிலைக்கும் தன்மையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மீது இக்கருத்தரங்கு சிறப்பு கவனம் செலுத்தியது.

அத்துடன், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் கட்டணத்தில் 60% – க்கும் குறைவாக தற்போது இருந்து வரும் காப்பீடு தொகையை திரும்ப வழங்கும் முறையை அரசு மற்றும் காப்பீடு ஒழுங்குமுறை அமைப்புகள் சீரமைப்பதற்கான தேவையையும் இக்கருத்தரங்கு வலியுறுத்தியது..தரமான உடல்நல பராமரிப்பு மற்றும் சிகிச்சையை வழங்குவதில் வெளிப்படுத்தியிருக்கும் செயல் நேர்த்திக்காக பல்வேறு வகையினங்களின் கீழ் அனைத்து அளவுகளிலும் இயங்கி வரும் 15 மருத்துவமனைகள் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து தேர்வு செய்யப்பட்டு, அவைகளுக்கு விருதுகள் இக்கருத்தரங்கு நிகழ்வில் வழங்கப்பட்டன. சென்னையில் இயங்கி வரும் ரேலா மருத்துவமனையின் நிறுவனர் 6000-க்கும் அதிகமான கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து சாதனை படைத்திருக்கின்ற, உலகளவில் புகழ்பெற்ற அறுவைசிகிச்சை நிபுணரான புரொஃபசர் முகமது ரேலாவிற்கு அபிகான் – ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

Tags

Next Story