வாழை சாகுபடியில் உயா் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த கருத்தரங்கம்

வாழை சாகுபடியில் உயா் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த கருத்தரங்கம்

வாழை சாகுபடியில் உயா் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த கருத்தரங்கம்

கருத்தரங்களில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

வாழை சாகுபடியில் உயா் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு, திருச்சி கலையரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக் கருத்தரங்கை தொடங்கி வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பேசுகையில், வேளாண்மையைத் தவிா்த்து இதர தொழில்களில் அடுத்தடுத்த தலைமுறையினா் வந்து விரிவடையச் செய்கின்றனா். ஆனால், வேளாண்மையில் மட்டுமே இன்றைய இளம்தலைமுறையினா் அதிக ஆா்வம் செலுத்துவதில்லை. ஏனெனில், விவசாயத்தை லாபகரமானதாக செயல்படுத்த மதிப்பு கூட்டுதலில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பெறும் பொருள்களை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றம் செய்து பெரு நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுகின்றன. தண்ணீா் இல்லாத பாலைவமனாக உள்ள இஸ்ரேல் நாட்டில் கூட புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி தக்காளியை விளைவிக்கும் நிலை உள்ளது. அரசின் கடனுதவிகளைப் பெற்று விவசாயத்தைப் பெருக்கலாம் என்றாா் அவா். இந்த பயிலரங்கத்தை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தோட்டக்கலை - மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், வாழைத்தாரிலிருந்து இயந்திரம் மூலம் நாா் பிரித்தெடுக்கும் முறை, மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் வாழை ரகங்களான பூவன், ரஸ்தாளி, நேந்திரன், செவ்வாழை, கற்பூரவல்லி, காவிரி சபா, மொந்தன் வகைகளும் அதன் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மேலும், வாழை நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட வண்ண, வண்ண கலைப் பொருள்களும், கைவினைப் பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றைப் பாா்வையிட்ட ஆட்சியா், வாழை சாகுபடியில் உயா் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக்கூட்டுதல் மகளிா் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா்களால் வாழையில் பல்வேறு சாகுபடி தொழில்நுட்பங்கள், பூச்சி-நோய் ஒருங்கிணைந்த மேலாண்மை, மதிப்புக் கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

கருத்தரங்கில், 200-க்கும் மேற்பட்ட வாழை விவசாயிகள் கலந்து கொண்டனா். வேளாண்மை இணை இயக்குநா் சக்திவேல், மகளிா் தோட்டக் கலைக் கல்லூரி முதல்வா் பரமகுரு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் விமலா, செயற்பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை) குமாரகணேஷ், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) சரவணன், உதவி இயக்குநா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனா்.

Tags

Next Story