சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனைகள் கருத்தரங்கு

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனைகள் கருத்தரங்கு

கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காந்திய சிந்தனைகள் கருத்தரங்கு நடைபெற்றது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை சார்பில் காந்திய சிந்தனைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆட்சி பேரவை கூடத்தில் நடந்தது. பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் தலைமை தாங்கினார்.

துறை தலைவர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். இதையடுத்து காந்தியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தர்மபுரி மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் தமிழ்மகன் இளங்கோ `மீண்டும் மீண்டும் மகாத்மா' என்ற தலைப்பில் பேசினார்.

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வரலாற்று துறை இணை பேராசிரியர் சந்திரசேகர் பங்கேற்று `காந்தி ஒரு மாபெரும் கனவு' என்ற தலைப்பிலும், தேசிய சமூக இலக்கிய பேரவை மாநிலத்தலைவர் தாரை குமரவேலு `மகாத்மாவும் தமிழகமும்' என்ற தலைப்பில் பேசினர்.

இதில் சமூகவியல், ஆங்கில இலக்கியம் பொருளாதார துறைகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சமூகவியல் துறை உதவி பேராசிரியர் சேதுராஜகுமார் நன்றி கூறினார்.

Tags

Next Story