பட்டுப்புழு வளர்ப்பு கருத்தரங்கு - ஆட்சியர் துவக்கி வைப்பு

பட்டுப்புழு வளர்ப்பு கருத்தரங்கு - ஆட்சியர் துவக்கி வைப்பு

கருத்தரங்கு

பெரம்பலூர் மாவட்டம் பட்டுப்புழு வளர்ப்பு முறையில் உள்ள நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள தனியார் உணவக கூட்ட அரங்கில் பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்ற பட்டுப்புழு வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் குத்து விளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார். சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் கலந்து கொண்ட இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போது பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் விவசாய பெருமக்களுக்கு அரசு மானியத்துடன் வழங்கப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் 256 ஏக்கரில் 125 விவசாயிகள் பட்டு வளர்ப்பு சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் 81.51 ஏக்கர் பரப்பளவில் 31 விவசாயிகள் மல்பரி நடவு செய்து பயனடைந்துள்ளனர். மாநிலத் திட்டத்தின் கீழ் 37.5 ஏக்கரில் மல்பரி நடவு செய்துள்ள 11 விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.10,000 வீதம் ரூ.3.93 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. நடவு மானியமாக 81.5 ஏக்கருக்கு 33 விவசாயிகளுக்கு ரூ.23.91 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இது போன்ற அதிகமான நலத்திட்ட உதவிகள் பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பட்டு வளர்ப்பு அதிக அளவில் இல்லாமல் இருந்தது. கடந்த ஐந்து வருடங்களாக பட்டு வளர்ப்பு அதிகமாகியுள்ளது.

45 நாட்களுக்கு ஒரு முறை வருமானம் கிடைக்கும் வகையில் பட்டு வளர்ச்சி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக உள்ளது. தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயிகள் பட்டு வளர்ப்பு குறித்த கருத்தரங்கினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன் பெற வேண்டும். என தெரிவித்தார். பின்னர் கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு பட்டு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, மல்பரி தோட்ட பராமரிப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த தொழில்நுட்பம் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய விஞ்ஞானி முனைவர் மகிமா சாந்தி யும், பட்டுப்புழு வளர்ப்பில் நோய்தடுப்பு மற்றும் கிருமி நீக்கம் குறித்த தொழில்நுட்பம் என்ற தலைப்பில் மத்திய பட்டு வாரிய விஞ்ஞானி முனைவர் செல்வராஜீ-ம் , மல்பரி தோட்டத்தில் பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் முனைவர் நேதாஜி மாரியப்பன் ஆகியோர் பேசினார்கள்.

மேலும் பல்வேறு தலைப்புகளில் பட்டுவளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பட்டு வளர்ச்சித்துறை திருச்சி மண்டல இணை இயக்குநர் மற்றும் மண்டல இணை இயக்குநர் பொருப்பில் உள்ள சந்திரசேகரன், முன்னோடி பட்டு விவசாயி செந்தில்குமார், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருச்சி ரெங்கப்பா, மற்றும் பெரம்பலூர் மணிகண்டன் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story