ஓசூரில் இருந்து 8 டன் காய்கறிகளை சபரிமலை அனுப்பி வைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் இருந்து சபரிமலையில் அன்னதானம் வழங்கிட 8 டன் எடையை கொண்ட காய்கறிகளை 4 பிக்அப் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது.
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் வழங்குவதற்காக சூளகிரி பகுதியை சேர்ந்த ஐயப்பா பக்தர்கள் சார்பில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் மற்றும் தமிழக பகுதிகள் என பல்வேறு இடங்களிலிருந்து வாங்கப்பட்ட தக்காளி,கேரட்,உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளை 4 பிக் அப் வாகனங்களில் செல்லப்பட்டது.
சபரிமலைக்கு கொண்டு சென்ற 8 டன் காய்கறிகளின் மதிப்பு 7 இலட்சம் ரூபாய் என கூறப்படும் நிலையில், இங்கிருந்து சூளகிரி ஐயப்பா பக்தர்கள் சார்பில் கொண்டு செல்லப்படும் காய்கறிகள், சபரிமலை கோவிலில் சமைத்து பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட உள்ளது.. காய்கறி வாகனங்களுக்கு ஐயப்பா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பூஜை செய்து வழி அனுப்பி வைந்தனர்