தபால் வாக்குகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைப்பு

தபால் வாக்குகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு அறைக்கு அனுப்பி வைப்பு

தபால் வாக்குகள் எண்ணும் பணி 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுக்களை மாநகராட்சி ஆணையாளர் /உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் தலைமையில் எண்ணப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டது.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கிய 114-தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு இன்று தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று சீல் வைக்கப்பட்ட ஓட்டுப்பெட்டிகளில் தபால் வாக்குகள் பெறப்பட்டு அதனை அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான பவன்குமார் ஜி. கிரியபனவர் தலைமையில் எண்ணப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு அனுப்பப்பட்டது. அதில் 232 தபால் ஓட்டுக்கு 212 வாக்குகள் பதிவாகியிருந்தது.

Tags

Next Story