சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம்!

சேந்தமங்கலம் ஒன்றிய திமுக செயல்வீர்கள் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ராஜேஷ்குமார் எம்.பி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களை ஆதரித்தும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கி பேசினார்.

இக்கூட்டமானது சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, ஒன்றிய கழக செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட திமுக துணை செயலாளர் ராணி, பேரூர் கழக செயலாளர்கள் தனபாலன், முருகேசன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கலைவாணன், கிளை கழக செயலாளர்கள், கிளை பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story