உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பல்

உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பல்

தஞ்சாவூரில் அடிப்படை வசதிகள் கோரி தபால் பெட்டி மூலம் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர், ஆளுநருக்கு அனுப்பினர்.


தஞ்சாவூரில் அடிப்படை வசதிகள் கோரி தபால் பெட்டி மூலம் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர், ஆளுநருக்கு அனுப்பினர்.

தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட அரசின் உயர் அமைப்பினருக்கு தபால் மூலம் கோரிக்கை மனுவை நேற்று அனுப்பினர். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட குழு சார்பில், தஞ்சாவூரில் புறக்கணிக்கப்படும் பூக்காரத் தெரு சுப்பிரமணியர் கோயிலின் செயல்பாடுகளை முடக்கி, தெருவாசிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யாமல் உள்ள மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் இருந்து காணாமல் போன கல்லுகுளம், மாரிக்குளம், பூட்டியே கிடக்கும் மாநகராட்சி படிப்பகம் ஆகியவற்றை மீண்டும் மீ்ட்டுருவாக்கம் செய்ய வேன்டும்.

தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் ரயில்வே சுரங்க பாதை வழியில் மழை நீர் தேங்கி, அவ்வழியாக நடந்து செல்லும் மக்களுக்கு நோய் தொற்று பரவி வருவதை தடுக்க வேண்டும். பூக்காரத் தெரு சுப்பிரமணியர் கோயில் அருகே இருந்து இடிந்து போன திருமண மண்டபத்தை மீண்டும் புதிதாக கட்ட வேண்டும். பூச்சந்தையில் காய்கனி வியாபாரம், கோழி, மீன் வியாாபரங்களுக்கு உரிய இடங்கள் இருந்தும் மீண்டும் அந்த வியாபாரங்களை ஏற்படுத்த வேண்டும். பூச்சந்தையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும். பூக்காரத் தெருவில் புதை சாக்கடை குழாய்களை முழுமையாக பதித்து, கழிவுநீர் புதைசாக்கடை வழியாக வெளியேற்ற வேண்டும்.

கழிவுநீரை திறந்தவெளியில் விடுவதை தடுக்க வேண்டும். பூச்சந்தை வழியாக இயக்கப்பட்ட அனைத்து பேருந்துகளையும் மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவின் கடிதங்களை, உச்சநீதிமன்ற நீதிபதி, பிரதமர், உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர், முதல்வருக்கு அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் என்.ஹாஜாமொய்தீன், மாநிலத் தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி, மாநிலப் பொருளாளர் ஆர்.ராஜாக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். படவிளக்கம்: தஞ்சாவூர் பூக்காரத் தெரு சுப்பிரமணியர் கோயில் அருகில் உள்ள தபால் பெட்டியில், அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி கோரிக்கை மனுக்களை தபால் மூலம் அனுப்பிய புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியினர். -

Tags

Next Story