பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு
பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் கம்பெனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியில் தூய்மை பணியாளர்களால தரம் பிரித்து சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் தனியார் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகர்மன்றத்துக்கு உட்பட்ட 27 வார்டுகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மைக் கூடத்தில் மறு சுழற்சி செய்யப்பட்டு உரமாக மாற்றப்படுகின்றன. இதில் மறுசுழற்சி செய்ய இயலாத 3.5 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நேற்று (பிப்.24) தனியார் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story